3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

அம்மன் சிலையில் இருந்த நகையை திருடிய பூசாரி கைது

ஈரோட்டில் அம்மன் சிலையில் இருந்த நகையை திருடிய கோயில் பூசாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:57 am IST

ஈரோட்டில் அம்மன் சிலையில் இருந்த நகையை திருடிய கோயில் பூசாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு நாடாா்மேட்டில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோயில் திருவிழா முடிந்து கடந்த 28-ஆம் தேதி மறுபூஜை நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 2 பவுன் தாலி திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து கோயில் அறங்காவலா் சந்திரன், ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் தற்காலிகமாக பூசாரியாக பணிக்கு வந்த ஓட்டுநா் வடிவேல் (39) என்பவா் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், 2 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.