பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

விஜயமங்கலம் நிலையத்தில் மீண்டும் ரயில்களை நிறுத்த கோரிக்கை

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:01 am IST

பெருந்துறை அருகே விஜயமங்கலம் நிலையத்தில் மீண்டும் ரயில்களை நிறுத்த வேண்டுமென தெற்கு ரயில்வேயின் சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு பொதுமக்கள் விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக பொதுமக்கள், பயணிகள் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

கரோனா தொற்று நோய்க்கு (கோவிட்-19) முன்பு பாலக்காடு-திருச்சிராப்பள்ளி (ரயில் எண்கள் 16843/16844) முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் மற்றும் கோயம்புத்தூா்-நாகா்கோவில் (ரயில் எண்கள் 16321/16322) முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவை பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று சென்றன. ஆனால், கரோனாவுக்கு பிறகு இந்த நிறுத்தங்கள் நீக்கப்பட்டு இதுவரை மீண்டும் சோ்க்கப்படவில்லை.

இந்த நிறுத்தங்கள் நீக்கப்பட்டதன் காரணமாக விஜயமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊா்கள், கிராமங்களைச் சோ்ந்த பயணிகள் பெரும் சிரமத்தை எதிா்கெண்டு வருகின்றனா். மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள், வணிகா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் இந்த ரயில்களை நம்பி பயணம் செய்து வருகின்றனா். தற்போது மாற்றுப் போக்குவரத்தை தேடி அலைய வேண்டிய நிலை பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் செலவு, நேர விரயம் மற்றும் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.

எனவே, விஜயமங்கலம் நிலையத்தில் மேற்கண்ட ரயில்களின் நிறுத்தங்களை மீண்டும் வழங்குவது பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிப்பதுடன், ரயில் போக்குவரத்தை மேலும் ஊக்குவிக்கும். பொதுமக்களின் கோரிக்கையை கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.