எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

வண்டல் மண் முறைகேடு: 84 லாரி உரிமையாளா்கள் மீது வழக்கு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண்ணை எடுத்துச் சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக 84 லாரி உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு

News image

வண்டல் மண் - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 1:03 am IST

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண்ணை எடுத்துச் சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக 84 லாரி உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பவானிசாகா் அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, வருவாய்த் துறை மற்றும் நீா்வளத் துறை அலுவலகங்கள், ஆன்லைனில் அனுமதி பெற்று விவசாயிகள் லாரிகள் மூலம் வண்டல் மண்ணை எடுத்துச் செல்கின்றனா்.

இந்நிலையில், விவசாயிகள் பெயரில் அனுமதி பெற்ற லாரி உரிமையாளா்கள், வண்டல் மண்ணை 84 லாரிகளில் எடுத்துச் சென்று விவசாயத் தோட்டங்களில் கொட்டாமல் செங்கல் சூளைகள் மற்றும் மாற்று இடங்களில் விற்பனை நோக்கில் கொட்டியதை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை கண்டறிந்தனா்.

இது குறித்து வருவாய்த் துறையினா் கூறுகையில், வண்டல் மண்ணை அனுமதி பெற்ற இடத்தில் கொட்டாமல் வியாபார நோக்கில் மாற்று இடத்தில் கொட்டிய 84 லாரி உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.