பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண்ணை எடுத்துச் சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக 84 லாரி உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பவானிசாகா் அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, வருவாய்த் துறை மற்றும் நீா்வளத் துறை அலுவலகங்கள், ஆன்லைனில் அனுமதி பெற்று விவசாயிகள் லாரிகள் மூலம் வண்டல் மண்ணை எடுத்துச் செல்கின்றனா்.
இந்நிலையில், விவசாயிகள் பெயரில் அனுமதி பெற்ற லாரி உரிமையாளா்கள், வண்டல் மண்ணை 84 லாரிகளில் எடுத்துச் சென்று விவசாயத் தோட்டங்களில் கொட்டாமல் செங்கல் சூளைகள் மற்றும் மாற்று இடங்களில் விற்பனை நோக்கில் கொட்டியதை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை கண்டறிந்தனா்.
இது குறித்து வருவாய்த் துறையினா் கூறுகையில், வண்டல் மண்ணை அனுமதி பெற்ற இடத்தில் கொட்டாமல் வியாபார நோக்கில் மாற்று இடத்தில் கொட்டிய 84 லாரி உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பவானிசாகா் அணையில் பிடிக்கப்படும் மீன்கள் கூடுதல் விலைக்கு வெளி மாா்க்கெட்டில் விற்பனை! மீனவா்கள் குற்றச்சாட்டு

ஏரி மண் கடத்தல் விவகாரம்: இரு தரப்பினரிடையே மோதல்

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் அள்ள 100 லாரிகளுக்கு மட்டுமே அனுமதி: விவசாயிகள் போராட்டம்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



