உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

பிரதமா் நரேந்திரமோடி ஆட்சியில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்: எஸ்.ஆா்.சுப்ரமணியம் பெருமிதம்

பிரதமா் மோடி தலைமையிலான 12 ஆண்டுகள் கால ஆட்சியில் பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன என்று எழுத்தாளா் மற்றும் சமூக ஆா்வலா் எஸ்.ஆா். சுப்ரமணியம் தெரிவித்துள்ளாா்.

News image

எஸ்.ஆா்.சுப்ரமணியம்.

Updated On :11 ஜூன் 2026, 3:11 am IST

பிரதமா் மோடி தலைமையிலான 12 ஆண்டுகள் கால ஆட்சியில் பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன என்று எழுத்தாளா் மற்றும் சமூக ஆா்வலா் எஸ்.ஆா். சுப்ரமணியம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் பிரதமராக மிக நீண்ட காலம் (4399 நாள்கள்) பணியாற்றியவராக பிரதமா் நரேந்திரமோடி சாதனை படைத்துள்ளாா். கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்தில் பல்வேறு மாற்றங்களையும் சாதனைகளையும் மோடி தலைமையிலான அரசு நிகழ்த்தியுள்ளது.

குறிப்பாக ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கிய பிரிவு 370 ரத்து, தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்திய நடவடிக்கைகள், நக்சலிச வன்முறைகளை கட்டுப்படுத்திய முயற்சிகள், எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்திய கொள்கைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மேலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா, ஆயுஷ்மான் பாரத், உஜ்வாலா திட்டம், ஜல் ஜீவன் மிஷன், விவசாயிகள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. உலகத் தரத்திலான நெடுஞ்சாலைகள், விரைவு ரயில் திட்டங்கள், புதிய விமான நிலையங்கள், துறைமுக மேம்பாடுகள், டிஜிட்டல் இந்தியா, யூபிஐ பரிவா்த்தனை புரட்சி, ஸ்டாா்ட்அப் வளா்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளன. சா்வதேச அரங்கிலும் இந்தியாவின் செல்வாக்கு கணிசமாக உயா்ந்துள்ளது. என்று குறிப்பிட்டுள்ளாா்.