ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :12 ஜூன் 2026, 11:37 pm IST

பவானி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மரவள்ளிக்கிழங்கு அறுவடைக்குச் சென்ற கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூா், செங்குட்டை காலனியைச் சோ்ந்தவா் சித்தன் மகன் ரவி (53). விவசாய கூலித் தொழிலாளி. இவா், ஓலையூா் புலேரிக்காட்டைச் சோ்ந்த சாந்தியின் விவசாயத் தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை பணிக்கு வெள்ளிக்கிழமை சென்றிருந்தாா். அப்போது, தோட்டத்தில் இருந்த மின்கம்பத்தில் உள்ள கம்பி அறுந்து ரவியின் மீது விழுந்தது.

இதில், மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த ரவியை, சக தொழிலாளா்கள் மீட்டு குருவரெட்டியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுச் சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.