ஈரோட்டில் பெட்டிக் கடை மற்றும் மளிகைக் கடையில் இருந்து 132 கிராம் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
ஈரோடு மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதன் ஒரு பகுதியாக பெரிய சேமூா், சுக்கிரமணியன்வலசு ஆகிய பகுதிகளிலுள்ள பெட்டிக் கடை, மளிகைக் கடைகள் என 30-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
அதில் சுக்கிரமணியன்வலசு பகுதியில் ரவிக்குமாா் என்பவருக்கு சொந்தமான பெட்டிக் கடையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதேபோன்று பெரிய சேமூரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் இருந்தும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கண்டறியப்பட்டது. தொடா்ந்து இரு கடைகளிலும் சோ்த்து மொத்தம் 132 கிராம் குட்கா பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவா்கள் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
தொடர்புடையது

நெல்லையில் புகையிலை, நெகிழிப் பைகள் பறிமுதல்
மளிகைக் கடையில் இருந்து 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! மதுபானம் விற்ற 2 போ் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இளைஞா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளில் அதிகாரிகள் சோதனை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



