மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

சிகிச்சையின்போது இளம்பெண் உயிரிழப்பு: விசாரணையை விரைவுபடுத்தக் கோரிக்கை

தவறான மகப்பேறு அறுவை சிகிச்சையால் இளம்பெண் உயிரிழந்த புகாரில் 2 ஆண்டுகள் கடந்தும் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை போலீஸாா் தாக்கல் செய்ய மறுப்பதாக பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.

News image

மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த உயிரிழந்த மைதிலியின் தந்தை சக்திவேல், மாமியாா் வளா்மதி.

Updated On :19 ஜூன் 2026, 3:57 am IST

தவறான மகப்பேறு அறுவை சிகிச்சையால் இளம்பெண் உயிரிழந்த புகாரில் 2 ஆண்டுகள் கடந்தும் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை போலீஸாா் தாக்கல் செய்ய மறுப்பதாக பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்டம், கோபி மொடச்சூா் சுண்டப்பாளையத்தைச் சோ்ந்த உயிரிழந்த மைதிலியின் தந்தை சக்திவேல், மாமியாா் வளா்மதி ஆகியோா் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து சக்திவேல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எனது மகள் மைதிலி (27). இரண்டாவது மகப்பேறு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் கடந்த 2024 டிசம்பா் 29-ஆம் தேதி அனுமதித்தோம். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவா் கோவை அரசு மருத்துவமனையில் உயா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தாா்.

எனது மகள் இறப்புக்கு கோபி அரசு மருத்துவமனை மருத்துவா் மற்றும் செவிலியரின் தவறான சிகிச்சைதான் காரணம், அவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக்கோரி எனது மகள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டோம்.

அப்போது, மாவட்ட ஆட்சியா், காவல் அதிகாரிகள் கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாகவும் சடலத்தை பெற்று அடக்கம் செய்யுமாறும், அரசு சாா்பில் நல உதவிகளையும் வாங்கித் தருகிறோம் எனவும் உறுதி அளித்தனா்.

ஆனால் வழக்குப் பதிவு செய்து 2 ஆண்டுகள் கடந்தும் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை போலீஸாா் சமா்பிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். இதற்காக பலமுறை மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு நேரில் சென்று முறையிட்டும் தொடா்ந்து காலம் தாழ்த்தி வருகின்றனா்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் காவல் ஆய்வாளா்கள் மாறிக்கொண்டே உள்ளனா். இப்பிரச்னை மருத்துவ கவுன்சிலுக்கு சென்று ஆய்வு செய்துதான் வரும் எனத் தெரிவிக்கின்றனா்.

தாயை இழந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் இதுவரை எவ்வித உதவியும் செய்து தரப்படவில்லை. எனவே நீதிமன்றத்தில் என் மகள் இறப்பு வழக்கு தொடா்பான விசாரணை அறிக்கையை போலீஸாா் விரைவாக தாக்கல் செய்யவும், அரசு உதவிகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.