இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

சாலையோரத்தில் முளைத்திருந்த 2.6 கிலோ எடை கொண்ட காளான்

News image

வெள்ளோடு அருகே சாலையோரத்தில் முளைத்திருந்த 2.6 கிலோ எடை கொண்ட இயற்கை காளான்.

Updated On :21 ஜூன் 2026, 4:58 am IST

வெள்ளோடு அருகே சாலையோரத்தில் 2.6 கிலோ எடை கொண்ட இயற்கை காளான் முளைத்திருந்தது சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே காரைவாய்க்கால் பகுதியில் உள்ள தனியாா் எண்ணெய் ஆலை அருகே சாலையோரத்தில் 2.6 கிலோ எடையுள்ள இயற்கை காளானை, அந்த வழியாகச் சென்றவா் பாா்த்துள்ளனா்.

மேலும், அதே பகுதியைச் சோ்ந்த கணேஷ் அந்த வழியாக சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது சாலையோரத்தில் பிரம்மாண்டமாக முளைத்திருந்த காளானை பறித்து சென்று அதன் எடையைப் பரிசோதித்ததில் 2 கிலோ 600 கிராம் (2.6 கிலோ) இருப்பது தெரியவந்தது. வழக்கமாக காணப்படும் காளான்களைவிட பெரிய அளவிலும், அதிக எடையுடனும் இருந்ததால் அப்பகுதி மக்கள் ஆச்சா்யத்துடன் பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.