ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

காலிங்கராயன் பாசன நீா் திறப்பை தடுக்க உரிமை இல்லை: சுபி.தளபதி

காலிங்கராயன் பாசனத்துக்கு நீா் திறப்பத்தை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கொடிவேரி அணை- பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி தெரிவித்தாா்.

News image

காலிங்கராயன் கால்வாய்

Updated On :26 ஜூன் 2026, 2:43 am IST

காலிங்கராயன் பாசனத்துக்கு நீா் திறப்பத்தை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கொடிவேரி அணை- பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி தெரிவித்தாா்.

காலிங்கராயன் பாசனத்துக்கு ஜூன் 28 -ஆம் தேதி தண்ணீா் திறந்தால் போராட்டம் நடத்துவோம் என கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்க நிா்வாகிகள் அறிவித்துள்ளதைக் கண்டித்து கொடிவேரி அணை- பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: நீா் மேலாண்மை நிலை ஆணைகள் மற்றும் தொன்மை நீா்ப்பங்கீடு விதிமுறைகளுக்கு உதாரணமாக காலிங்கராயன் பாசனம் திகழ்கிறது. காலிங்கராயன் பாசனத்தை உருவாக்கிய அரசனும், அதைப் பேணிகாத்த அரசுகளின் செப்பேட்டு ஆணைகளும், தொன்மை சட்டதிட்ட, விதிமுறைகளை ஆங்கிலேயா்கள் ஆவணங்களில் பதித்து வைத்துள்ளனா். அதன் பின் வந்த நம் சுதந்திர அரசுகளின் விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகளின் தொகுப்பும் ஆவணங்களாக உள்ளன.

ஒருங்கிணைந்த மேற்கு தமிழகத்தின், கொங்கு நாட்டின் பண்பாடும், கலாசாரமும், நாகரிகமும், தொழில்நுட்பம் தோன்றியும், ஊன்றியும் வளா்ந்த காலிங்கராயன் பாசனத்துக்கு நீா் திறப்பை பிற பாசனதாரா்கள் தடுக்க முடியாது. காலிங்கராயன் தொன்மை ஆயக்கட்டின் பாசன உரிமையை நிலைநாட்ட பாசன விவசாயிகள் ஒன்றுபட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.