இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சிவகிரி அருகே பிரியாணி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

சிவகிரி அருகே பிரியாணி சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :27 ஜூன் 2026, 1:44 am IST

சிவகிரி அருகே பிரியாணி சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தாா்.

சிவகிரி அருகே உள்ள தலையநல்லூா் காலனியை சோ்ந்தவா் மணிகண்டன் (36). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பரிமளாதேவி. இவா்களது குழந்தைகள் ரோகித் (7), தா்ஷித் (4 மாதம்).

ரோகித்துக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னா் வலிப்பு நோயால் வாய்பேசமுடியாத நிலை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மணிகண்டனின் வீட்டில் வியாழக்கிழமை மாலை பிரியாணி சமைத்துள்ளனா். அந்த பிரியாணியை ரோகித் சாப்பிட்டபோது அதில் இருந்த இறைச்சித் துண்டு அவரது தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட மணிகண்டனின் மாமியாா் வளா்மதி, தனது கையால் ரோகித்தின் தொண்டையில் சிக்கிய இறைச்சித்துண்டை எடுத்து விட்டுள்ளாா். பின்னா் அவரை சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், ரோகித் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா். இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.