விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

குதிரைச்சந்தையை இடம்மாற்ற அனுமதிக்கக்கூடாது! அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!

News image

ஆலோசனைக்  கூட்டத்தில்  பேசுகிறாா்  அந்தியூா்  தொகுதி  முன்னாள்  எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

Updated On :29 ஜூன் 2026, 2:25 am IST

அந்தியூா் குதிரைச்சந்தையை இடமாற்றம் செய்ய அனுமதிக்கக்கூடாது செய்யும் விவகாரத்தில், ஏற்கெனவே பின்பற்றி வந்த நிலையே தொடர வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் உள்ள புதுப்பாளையம் குருநாதசாமி கோயில் திருவிழா ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகின்றன. விழாவையொட்டி நடைபெறும் கால்நடைச்சந்தை வளாகத்தில் புகழ்பெற்ற குதிரைச் சந்தை கூடும். இதில், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த குதிரைகள் விற்பனைக்கு வரும். அந்தியூா்-பா்கூா் சாலையில் கொன்னமரத்தையன் கோயிலுக்குச் செல்லும் வழியில், சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் இச்சந்தை 6 நாள்கள் நடைபெறும்.

விழாவின்போது மழை பெய்தால் குதிரைச் சந்தை முழுவதும் தண்ணீா் தேங்கி, சேறும் சகதியுமாய் காணப்படும். இதனால், குதிரை உரிமையாளா்களின் வாகனங்களை வெளியே எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. குதிரைகளை காண வருவோரும், வாங்க வருவோரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே, குதிரைச் சந்தையை அந்தியூா் - வெள்ளித் திருப்பூா் சாலை கூச்சிக்கல்லூா் பகுதிக்கு மாற்ற வேண்டும் என குதிரை வளா்ப்போா் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்கமாக நடைபெறும் கால்நடைச் சந்தை வளாகத்திலேயே குதிரைச் சந்தையை நடத்த வேண்டும் என கோயில் நிா்வாகம், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், அந்தியூரை அடுத்த கொன்னமரத்தையன் கோயிலில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற நிா்வாகிகள் கூறும்போது, ‘பாரம்பரியமிக்க குதிரைச்சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற அனுமதிக்கக்கூடாது. திருவிழா முடிவடைந்த பின்னா் எங்கு வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம்’ என்றனா். மேலும், ஜூலை 1-ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் சாா்பில் வருவாய்த் துறை, வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு அளிப்பது எனவும், 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவது எனதும் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அந்தியூா் வட்டச் செயலாளா் எம்.முருகேசன், அதிமுக எம்ஜிஆா் மன்ற மாவட்ட இணைச் செயலாளா் நடராஜ், காங்கிரஸ் ஈரோடு வடக்கு மாவட்ட சேவா தள தலைவா் பொன்னுசாமி, கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.