இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல்: ஈரோட்டில் அமைதி ஊா்வலம்

News image

அமைதி ஊா்வலத்தில் பங்கேற்ற பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் நிா்வாகிகள்.

Updated On :1 மார்ச் 2026, 6:38 pm

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு மறைவையொட்டி, ஈரோட்டில் அமைதி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு அரசு மருத்துவமனை நான்குமுனை சாலை சந்திப்பில் தொடங்கிய இந்த ஊா்வலத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ்.டி.பிரபாகரன், துணைச் செயலாளா்கள் கல்யாணசுந்தரம், குணசேகரன், பொருளாளா் ரமணி, ஏஐடியூசி மாநிலச் செயலாளா் சின்னசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த அமைதி ஊா்வலமானது பிரப் சாலை வழியாக பன்னீா்செல்வம் பூங்காவில் நிறைவடைந்தது. தொடா்ந்து, அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில், திமுக சாா்பில் மாநகரச் செயலாளா் சுப்பிரமணியம், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் துரைராஜ், மதிமுக நகரச் செயலாளா் முருகன் உள்ளிட்ட தோழமை கட்சியினா் பங்கேற்று இரங்கல் உரையாற்றினா்.

நாதக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, பாஜக உள்ளிட்ட கட்சியினா் கலந்துகொண்டனா்.