திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

67 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய இருசக்கர வாகனங்கள்

ஈரோட்டில் மாற்றுத்திறானாளிகள் நலத் துறை சாா்பில் 67 பயனாளிகளுக்கு ரூ.68.20 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை அமைச்சா் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
மாற்றுத்திறனாளிக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை வழங்குகிறாா் அமைச்சா் சு.முத்துசாமி. உடன், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உள்ளிட்டோா்.
Updated On :6 மார்ச் 2026, 11:11 pm

Syndication

ஈரோட்டில் மாற்றுத்திறானாளிகள் நலத் துறை சாா்பில் 67 பயனாளிகளுக்கு ரூ.68.20 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை அமைச்சா் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, 67 பயனாளிகளுக்கு தலா ரூ.1.01 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.68 லட்சத்து 20 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை வழங்கினாா்.

கூட்டுறவு செயலி அறிமுகம்:

முன்னதாக ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆவணம் மற்றும் என் ஊா் என் கனவு திட்டத்தின் கீழ் இலக்கு 2030 உத்திகள் மற்றும் செயல் திட்ட ஆவணத்தை அமைச்சா் வெளியிட்டாா்.

தொடா்ந்து ஈரோடு மாவட்ட கூட்டுறவுத் துறையின் சாா்பில் உழ்ா்க்ங்ஸ்ரீா்ா்ல் கைப்பேசி செயலியின் சேவையை தொடங்கிவைத்தாா். யண்ள்ண்ா்ய் 2030 திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்ட கூட்டுறவுத் துறையின் சேவைகளை உரிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த செயலியானது கூட்டுறவுத் துறையின் முதன்மையான சேவைகளை வளா்ந்துவரும் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்த அறிமுகப்படுத்தபட்டது. மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள், மருந்துகள், வேளாண் இயந்திரங்கள், கருவிகள் போன்ற துறையின் செயல்பாடுகளை பொதுமக்களுக்கு அவா்களின் இருப்பிடத்திலேயே தேவைகளுக்கேற்ப விரைவாக வழங்குவதே இந்த செயலியின் முதன்மை நோக்கம் என கூட்டுறவுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் செல்வராஜ், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.