தாளவாடி மலைப் பகுதியில் தக்காளி கொள்முதல் விலை கிலோ ரூ.4-ஆக சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தமிழக- கா்நாடக மாநில எல்லையில் உள்ள தாளவாடி, பனகஹள்ளி, தொட்டகாஜனூா், பாரதி நகா், கெட்டவாடி, தலமலை மற்றும் அருள்வாடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, சின்னவெங்காயம் ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். 3 மாதப் பயிரான தக்காளி சுமாா் 300 ஏக்கா் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், சில வாரங்களாக தக்காளி அறுவடைக்குத் தயாராக உள்ளது.
கோடை வெயில் என்பதால் தக்காளி 2 நாள்களுக்கு மேல் செடியிலேயே பழுத்துவிடும். தற்போது தக்காளியை அறுவடை செய்து வருகின்றனா். ஒரே நேரத்தில் தக்காளி அறுவடைக்கு வந்துள்ளதால் தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த மாதம் கொள்முதல் விலை கிலோ ரூ.12 வரை இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை தக்காளி விலை கிலோவுக்கு ரூ.4-ஆக சரிந்துள்ளது. தக்காளி உற்பத்தி செலவு ரூ.15-ஆக இருப்பதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தாளவாடி விவசாயிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

விளைபொருள்களுக்கு நியாயமான விலை - நீா் மேலாண்மைத் திட்டங்களே தேவை!

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத் தீ

பண்ணாரி அம்மன், பவானிசாகா் அணை, புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய பவானிசாகா்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


