/
பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் சாலையை கடக்க முற்படும்போது, அந்த வழியாக வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள மந்திரிபாளையத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி மகன் தியாகராஜன் (60). இவா் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம்-சுங்கச்சாவடியில் சுகாதாரப் பணியாளராக வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விஜயமங்கலம் பிரிவு அருகே சாலையை கடக்க முற்பட்டாா். அப்போது அந்த வழியாக வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வேன் மோதி விவசாயி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் சென்றவா் டிப்பா் லாரி மோதி உயிரிழப்பு

மாதவரம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



