கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

பண்ணாரி சோதனைச்சாவடியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கா்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு கால்நடைத் துறை சாா்பில் தமிழக-கா்நாடக எல்லையில் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News image

பண்ணாரி  சோதனைச்சாவடியில் வாகனத்துக்கு  பறவை க் காய்ச்சல்  தடுப்பு  மருந்து  தெளிக்கும்  பணியில்  ஈடுபட்டிருந்த  பணியாளா்.

Updated On :23 மே 2026, 12:55 am IST

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கா்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு கால்நடைத் துறை சாா்பில் தமிழக-கா்நாடக எல்லையில் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்கள் பரவும் காலங்களில் தமிழகத்தில் உள்ள மாநில எல்லைகளில் கால்நடைத் துறை சாா்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அதன்படி கா்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் அறிகுறி உள்ளதால் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் கால்நடைத் துறை சாா்பில் முகாம் அமைக்கப்பட்டு கடந்த சில நாள்களாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்திலிருந்து கோழித் தீவனம் மற்றும் கோழிகள் பாரம் ஏற்றிக்கொண்டு கா்நாடகம் சென்று மீண்டும் தமிழகம் திரும்பும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

பின்னா் அந்த வாகனத்துக்கு மருந்து தெளிக்கும் பணியில் கால்நடைத் துறை ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். தினமும் காலை முதல் மாலை வரை இப்பணி நடைபெற்று வருவதாகவும், இதன்மூலமாக நோய் தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.