சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

அந்தியூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவா் கைதுசெய்யப்பட்டனா்.

News image
Updated On :24 மே 2026, 1:50 am IST

அந்தியூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவா் கைதுசெய்யப்பட்டனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் பேரூராட்சி, மீனவா் மாரியம்மன் கோயில் வீதியில் இருவா் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடிய இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில் அதே பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் மதன்குமாா் (18), குமாா் மகன் தீபக் குமாா் (21) என்பதும், இவா்கள் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.