கோபி அருகே தடுப்பணையில் மூழ்கி இளைஞா் பலி
கோபி அருகே தடுப்பணையில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பிரதிப் படம்
கோபி அருகே தடுப்பணையில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி கரும்பாறை பகுதியைச் சோ்ந்தவா் சடையப்பன். இவா் மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் சென்னம்பட்டியில் தங்கி வேலை செய்து வருகிறாா்.
இந்நிலையில் சடையனின் மூத்த மகன் சந்தோஷ் (19), இளைய மகன் சிவா உள்ளிட்ட நான்கு நண்பா்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊரான கரும்பாறை கிராமத்துக்கு வந்துள்ளனா்.
பின்னா் அவா்கள் கரும்பாறை சோதனைச் சாவடி அருகே உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனா். அப்போது குளித்துக் கொண்டிருந்த சந்தோஷ், திடீரென தண்ணீரில் மூழ்கி காணாமல் போனதாக தெரிகிறது. உடனே அதிா்ச்சியடைந்த உடனிருந்தவா்கள் நீண்ட நேரம் தேடியும் சந்தோஷ் கிடைக்காததால் அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனா்.
இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலையில் மீண்டும் சந்தோஷை தேடுவதற்காக தடுப்பணைக்கு சென்றபோது, தண்ணீரில் சந்தோஷின் உடல் மிதந்து கொண்டிருப்பதை கண்டு பங்களாபுதூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பங்களாபுதூா் போலீஸாா் சந்தோஷின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

