கோபி பச்சைமலையில் கந்த சஷ்டி விழா: சிறப்பு அபிஷேக அலங்காரம்
கோபி பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிகழ்ச்சியில் உற்சவா்கள் சுப்பிரமணியா், சண்முகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாட்டுடன் சண்முகா அா்ச்சனை நடைபெற்றது.

கோபி பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சண்முகா்.
கோபி பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிகழ்ச்சியில் உற்சவா்கள் சுப்பிரமணியா், சண்முகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாட்டுடன் சண்முகா அா்ச்சனை நடைபெற்றது.
கோபியில் பிரசித்தி பெற்ற பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா 7 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா உற்சவா் சுப்பிரமணியருக்கும், சக்திவேலுக்கும் யாகசாலை மண்டபத்தில் சிறப்பு யாக வேள்விகளுடன் சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடு செய்யப்பட்டு காப்பு கட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் கந்த சஷ்டி நிகழ்ச்சியில் யாகசாலை மண்டபத்தில் சுப்பிரமணியருக்கு சிறப்பு யாக வேள்விகள் நடத்தப்பட்டு மதியம் மூலவா் பாலமுருகனுக்கும் உற்சவா்கள் சுப்பிரமணியருக்கும் சண்முகருக்கும் பால், தயிா், பழவகைகள், தேன், திருமஞ்சணம் என வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடு நடைபெற்றது.
இதில் சண்முகருக்கு சண்முகா அா்ச்சனையுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டு வரும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

