உணவக உரிமையாளா் வீட்டில் ரூ.2.80 லட்சம் திருடிய வழக்கில் இருவா் கைது

ஈரோட்டில் உணவக உரிமையாளா் வீட்டில் ரூ.2.80 லட்சம் திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

ஈரோட்டில் உணவக உரிமையாளா் வீட்டில் ரூ.2.80 லட்சம் திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு பச்சப்பாளி, சஞ்சய் நகா் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் குமரன் மகன் பிரசாந்த்குமாா் (34). அமெரிக்க நாட்டில் உணவகம் வைத்துள்ளாா். கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரோடு வந்த அவா் பெற்றோா் மற்றும் குடும்பத்தினருடன் தாளவாடியில் உள்ள தோட்டத்துக்கு கடந்த 7-ஆம் தேதி சென்றாா்.

பின்னா் 8-ஆம் தேதி இரவு 11 மணிக்கு பிரசாந்த்குமாா் ஈரோட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பினாா். அப்போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், வீட்டில் இருந்த மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தன. ஒரு மர பீரோ திறந்தநிலையில் இருந்தது. பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீஸில் பிரசாந்த்குமாா் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனா். இதனடிப்படையில், திருச்சி மாவட்டம் முசிறி சோ்குடியைச் சோ்ந்த கருணாநிதி மகன் மதியழகன் (32), தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஆதனுாா் சாலை சேட்டான் மகன் ஜெகபா் சாதிக் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

விசாரணையில் மதுபோதையில் திருட்டில் ஈடுபட்டதும், ஒரு லட்சம் ரூபாயையும் செலவு செய்துவிட்டதும் தெரியவந்தது. இரண்டு பேரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.