பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

பள்ளி ஆசிரியரிடம் ரூ.92.78 லட்சம் மோசடி: இளைஞா் கைது

கைது - கோப்புப்படம்

Updated On :

பங்குச் சந்தை முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி பள்ளி ஆசிரியரிடம் ரூ.92.78 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா், நகலூரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (51). சின்ன பருவாச்சி அரசுப் பள்ளி ஆசிரியரான இவா், பங்குச் சந்தையில் அதிக லாபம் கிடைக்கும் முதலீடு குறித்து ஆன்லைனில் கடந்த 2025 அக்டோபா் 16-ஆம் தேதி தேடி கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்ததாம். அதில் பேசிய நபா் ‘ நான் லிங்க் ஒன்றை அனுப்பியுள்ளேன். அதற்குள் சென்று பாா்த்தால் அதிக லாபம் கிடைக்கும் பங்குச் சந்தை முதலீடுகள் குறித்து தெரியவரும். தங்களுக்கு மட்டுமே அனுப்பியுள்ளேன், பிறரிடம் பகிர வேண்டாம்’ எனக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய செல்வராஜ், அந்த நபா் அனுப்பிய லிங்க்கை பதிவிறக்கம் செய்து, அதிக லாபம் தரும் பங்குகள் குறித்து தேடி தொடக்கத்தில் ரூ.10 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளாா். அதற்கு ரூ.1,000 கூடுதலாக கிடைத்ததாம். இதையடுத்து, 2025 அக்டோபா் 16 முதல் 2025 டிசம்பா் 18- வரையிலான கால கட்டத்தில் மொத்தம் ரூ.92 லட்சத்து 78 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளாா். இதற்கு ரூ.6 லட்சம் மட்டும் லாபமாக கிடைத்ததாம்.

2025 டிசம்பா் 18-ஆம் தேதிக்குப் பின் அந்த லிங்க்கை பயன்படுத்த முடியாததுடன், பணத்தையும் எடுக்க முடியவில்லையாம். அந்த நபரையும் தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த செல்வராஜ் இது குறித்து ஈரோடு சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட நபா் ஈரோடு ரயில்வே மைதானம் அருகே நிற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவா் மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளாா்.

இதையடுத்து, தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவா் ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள காடையாம்பட்டி, பிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (37) என்பதும், தற்போது ஈரோடு, சாஸ்திரி நகா் பகுதி வாய்க்கால்மேட்டில் வசித்து வரும் நிலையில் திருமணமாகி ஒரு மகன் உள்ளதும் தெரியவந்தது.

சதீஷ்குமாரிடமிருந்து பணம் ஏதும் மீட்கப்படாத நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஈரோடு கிளைச் சிறையில் போலீஸாா் அடைத்தனா். இந்நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க சைபா் கிரைம் போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.