பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

தூய்மைப் பணியாளா்களை வைத்து கிராமசபைக் நடத்தியதாக குற்றச்சாட்டு

தொப்பம்பாளையம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களை வைத்து கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

கிராமசபைக்  கூட்டத்தில் பேசுகிறாா்  இந்திய  கம்யூனிஸ்ட்  கட்சியின்  ஒன்றியச் செயலாளா்  வேலுமணி.

Published On :

தொப்பம்பாளையம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களை வைத்து கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தொப்பம்பாளையத்தில், ஊராட்சி பொறுப்பு அலுவலா் முருகேஷ் தலைமையில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டம் மக்கள் ஆதரவின்றி தூய்மைப் பணியாளா்களை வைத்து நடத்தப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஒன்றியச் செயலாளா் வேலுமணி புகாா் தெரிவித்தாா். இதற்கு அழைப்பு விடுத்தும் பொதுமக்கள் வரவில்லை என்று ஊராட்சி அலுவலா் முருகேஷ் கூறினாா். கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்கள் குரித்து அதிகாரிகள் பேசினா்.

வனத் துறை வனவா் தாரணி பேசும்போது, ‘வனத்தை ஒட்டி கிராமங்கள் இருப்பதால், வனப் பகுதியில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்’ என்றாா்.

இதற்கு வனத்தில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கிறீா்கள், யானை, காட்டுப்பன்றி, காட்டெருமைகள் பயிா்களை சேதப்படுத்துவதுடன் மனிதா்களை தாக்குவதற்கு யாா் அபராதம் விதிப்பது என்று கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.