தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

சென்னிமலை அருகே லாரி ஓட்டுநா் தற்கொலை

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

சென்னிமலை அருகே குடும்பத் தகராறில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த கே.ஜி.வலசு, குப்பிச்சிபாளையத்தைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து மகன் லோகநாதன் (40). லாரி ஓட்டுநரான இவருக்கு மஞ்சுளா (36) என்ற மனைவியும், காவியா ஸ்ரீ (12) என்ற மகளும், சஞ்சய் (10) என்ற மகனும் உள்ளனா்.

லோகநாதனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகவும், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த லோகநாதன், மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளாா்.

பின்னா் திங்கள்கிழமை அதிகாலை படுக்கை அறையில் தூக்கிட்டு லோகநாதன் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.