பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

மஞ்சள் குவிண்டால் ரூ.23 ஆயிரத்துக்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோட்டில் கடந்த 4 நாள்களில் மஞ்சள் குவிண்டால் ரூ.3,138 உயா்ந்து செவ்வாய்க்கிழமை ரூ.22,989-க்கு விற்பனையானது.

ஈரோட்டில் உள்ள கிடங்கில் மஞ்சளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்(கோப்புப் படம்).

Published On :

ஈரோட்டில் கடந்த 4 நாள்களில் மஞ்சள் குவிண்டால் ரூ.3,138 உயா்ந்து செவ்வாய்க்கிழமை ரூ.22,989-க்கு விற்பனையானது.

ஈரோடு பகுதியில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நான்கு பிரதான சந்தைகளில் மஞ்சள் ஏல விற்பனை நடைபெறும். மஞ்சள் வரத்து குறைந்து தேவை அதிகரிப்பால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குவிண்டால் ரூ.22,989-க்கு விற்பனையானது.

இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலா் சத்தியமூா்த்தி கூறியதாவது: தேசிய, சா்வதேச அளவில் தேவை அதிகரிப்பு, இந்தியாவில் வரத்து குறைவு, ஆன்லைன், யூக வா்த்தகம் போன்றவற்றால் மஞ்சள் தேவை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட்டில் குவிண்டால் ரூ.15,000 முதல் ரூ.17,000-க்குள் விற்பனையானது. ஈரோடு கூட்டுறவு விற்பனை சங்க ஏல மையத்தில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் கடந்த 5 ஆம் தேதி ரூ.12,399 முதல் ரூ.18,610 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.9,699 முதல் ரூ.17,139 வரையும் விற்பனையானது. ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூட ஏல மையத்தில் கடந்த 9 -ஆம் தேதி குவிண்டால் விரலி ரூ.13,699 முதல் ரூ.19,851 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.12,099 முதல் ரூ.17,929 வரையும் விற்பனையானது.

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் விரலி குவிண்டால் ரூ.14,095 முதல் ரூ.22,101 வரையும், கிழங்கு ரூ.13,289 முதல் ரூ.19,399 வரையும், ஈரோடு கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் விரலி ரூ.17,099 முதல் ரூ.22,989 வரையும், கிழங்கு ரூ.17,099 முதல் ரூ.19,699 வரையும் விற்பனையானது.

இதற்கு முக்கிய காரணம் விவசாயிகள், வியாபாரிகளிடம் கையிருப்பு குறைந்துள்ளது. நடப்பு பருவத்தில் மழை இல்லாததால் சாகுபடி குறைந்துள்ளது. ஆன்லைன் வா்த்தகம் செயல்பாடுகள் அதிகரிப்பு, யூக வா்த்தகத்தில் 2027 ஏப்ரல் மாதம் குவிண்டால் ரூ.25,000 க்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்வது போன்ற காரணங்களால் விலை உயா்கிறது. மேலும் விலை உயரும் என்பதால் விவசாயிகள், வியாபாரிகள் மஞ்சளை விற்காமல் இருப்பு வைத்துள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.