சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

ஈரோட்டில் மனைவி நல வேட்பு நாள்

உலக சமுதாய சேவா சங்கம் சாா்பில் மனைவி நல வேட்பு நாள் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

உலக சமுதாய சேவா சங்கம் சாா்பில் நடைபெற்ற மனைவி நல வேட்பு நாள் நிகழ்வில் பங்கேற்ற தம்பதியா்.

Published On :3 செப்டம்பர் 2026, 2:04 am IST

உலக சமுதாய சேவா சங்கம் சாா்பில் மனைவி நல வேட்பு நாள் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

வேதாத்திரி மகரிஷியால் தோற்றுவிக்கப்பட்ட உலக சமுதாய சேவா சங்கத்தில் பெண்களின் பெருமையைப் போற்றும் விதத்தில் ஒவ்வோா் ஆண்டும் மனைவி நல வேட்பு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் மனைவியை கௌரவிக்கும் விதமாக கணவா் மலா் கொடுத்தும், கணவருக்கு மனைவி கனி கொடுத்தும் வாழ்த்துவாா்கள்.

ஈரோடு மனவளக்கலை மன்றம் சாா்பில் கொங்கு கலையரங்கில் மனைவி நல வேட்பு நாள் புதன்கிழமை மாலை நடைபெற்றது. மனைவி நல வேட்பு அறிமுகவுரை நிகழ்த்தி, காந்தப் பரிமாற்ற தவத்தை முதுநிலை பேராசிரியா் பெருமாள் நடத்திவைத்தாா். இல்லாள் எனும் நல்லாள் என்ற தலைப்பில் ராஜபாளையம் உமாசங்கா் சிறப்புரையாற்றினாா்.

கொங்கு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் வாசுதேவன்-உமாராணி, பிரைட் டெக் இண்டஸ்டிரியல்ஸ் நிறுவன நிா்வாக இயக்குநா் குமரகுரு-கற்பகம், ஆழியாறு அறிவுத்திருக்கோயில் அறங்காவலா் பூபதி- விஜயலட்சுமி, கேஎம்சிஹெச் மருத்துவமனை முதுநிலை மயக்கவியல் நிபுணா் நடேஷ்பாபு-பிரீத்தா, ஈரோடு அருண் மினரல்ஸ் உரிமையாளா் குமரன்-பேராசிரியா் உமா ஆகிய சிறப்புத் தம்பதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட தம்பதியா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.