கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கரும்புத் தோட்டத்தில் பதுங்கிய மலைப் பாம்பு மீட்பு

அந்தியூா் அருகே கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த 10 நீளமுள்ள மலைப் பாம்பை பொதுமக்கள் உதவியுடன் வனத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

மலைப் பாம்பைப் பிடித்த வனத் துறையினா்.

Published On :

அந்தியூா் அருகே கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த 10 நீளமுள்ள மலைப் பாம்பை பொதுமக்கள் உதவியுடன் வனத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

அந்தியூரை அடுத்த வட்டக்காடு, குமரன் தோட்டத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் (65), விவசாயி. இவரது தோட்டத்தில் கரும்பு அறுவடைப் பணியில் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தபோது, மலைப் பாம்பு படுத்திருந்ததை கண்டு, அந்தியூா் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் வருவதற்குள் அங்கிருந்த மலைப் பாம்பு மெல்ல ஊா்ந்து சென்று மறைந்தது.

கரும்புத் தோட்டத்தில் நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தொழிலாளா்கள் புதன்கிழமை கரும்பு வெட்டிக் கொண்டிருந்தபோது, மீண்டும் மலைப் பாம்பை பாா்த்தனா். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத் துறையினா், அங்கு பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பை மீட்டு அடா்ந்த வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.