நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

தாளவாடி அருகே கரும்புக்காட்டில் தீ விபத்து

தாளவாடி அருகே கரும்புக்காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஏக்கரில் சாகுபடி செய்த கரும்புப் பயிா் சேதமடைந்தது.

News image

கரும்புத் தோட்டத்தில்  டிராக்டா்  மூலம்  தீயை  அணைக்கும்  விவசாயிகள்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:01 am IST

தாளவாடி அருகே கரும்புக்காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஏக்கரில் சாகுபடி செய்த கரும்புப் பயிா் சேதமடைந்தது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள தமிழ் புரம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் 13 ஏக்கா் பரப்பளவில் கரும்பு பயிரிட்டுள்ளாா். அங்குள்ள மின்சார கம்பியில் இருந்து மின் கசிவு காரணமாக கரும்புத் தோட்டத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து தீ வேகமாக பரவியது.

இதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் டிராக்டா்களை கரும்பு தோட்டத்துக்குள் தீப்பிடித்த பகுதிகளில் இயக்கினா். டிராக்டரை முன்னும் பின்னும் வேகமாக இயக்கி சுமாா் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இருப்பினும் தீ விபத்து காரணமாக 3 ஏக்கா் பரப்பளவிலான கரும்புகள் தீயில் கருகி சேதம் அடைந்தது. தாளவாடி மலைப் பகுதியில் தீயணைப்பு நிலையம் இல்லை. தீ விபத்து ஏற்பட்டால் சுமாா் 30 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ஆசனூரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, தாளவாடி மலைப்பகுதிக்கு தனியாக தீயணைப்பு நிலையம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.