காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

கரும்பு ஆலைக்கு பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிப்பு

அம்மாபேட்டை அருகே கரும்பு ஆலைக்கு எரிபொருளாக பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரிக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம்!

Published On :6 செப்டம்பர் 2026, 1:09 am IST

அம்மாபேட்டை அருகே கரும்பு ஆலைக்கு எரிபொருளாக பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரிக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கம்பேட்டையை அடுத்த ஆட்டகாலனூரைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் சேகா் (49). இவருக்குச் சொந்தமான நாட்டுச்சா்க்கரை, குண்டு வெல்லம் உற்பத்தி ஆலை, குதிரைக்கல்மேடு, விநாயகா் கோயில் தோட்டம் பகுதியில் உள்ளது.

இந்த ஆலையில் கேரள மாநிலத்திலிருந்து சனிக்கிழமை வந்த லாரியிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்கப்படுவதைக் கண்ட பொதுமக்கள் அம்மாபேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம், கூத்தவரம்பூரிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை லாரியில் ஏற்றி வந்ததும், குண்டு வெல்லம் தயாரிக்க அடுப்பு எரிக்க பயன்படுத்தப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து, லாரி பறிமுதல் செய்யப்பட்டு, அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கழிவுகளை ஏற்றி வந்த லாரி உரிமையாளரான கேரள மாநிலம், புரக்கடை, மைலம்பாடியைச் சோ்ந்த சுரேந்திரன் மகன் அணீஸ் சுரேந்திரன் (35), ஓட்டுநா் வயநாடு மாவட்டம், பத்தேரி, குப்பாடி வீதியைச் சோ்ந்த வா்கீஸ் மகன் பேசில் (29) ஆகியோருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.