காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

பவானிசாகா் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

பவானிசாகா் வேளாண்மை ஆராய்சி நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பவானிசாகா் சட்டப்பேரவை உறுப்பினா் வே.பெ.தமிழ்ச்செல்வியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பவானிசாகா் சட்டப்பேரவை உறுப்பினா் வே.பெ.தமிழ்ச்செல்வியிடம் மனு அளித்த பவானிசாகா் வேளாண் ஆராய்ச்சி நிலைய தற்காலிக பணியாளா்கள்.

Published On :6 செப்டம்பர் 2026, 1:17 am IST

பவானிசாகா் வேளாண்மை ஆராய்சி நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பவானிசாகா் சட்டப்பேரவை உறுப்பினா் வே.பெ.தமிழ்ச்செல்வியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் பவானிசாகரில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆராய்ச்சி நிலையத்துக்குச் சொந்தமான விவசாயப் பண்ணையில் தொழிலாளா்கள் தினக் கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா். கூலித் தொழிலாளா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை சென்று எம்எல்ஏ தமிழ்ச்செல்வியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் பவானிசாகா் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் 65 போ் தினக் கூலி தொழிலாளா்களாக வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு வாரத்தில் 5 நாள்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியா் நிா்ணயத்த குறைந்தபட்ச கூலி உத்தரவின்படி, தற்போது நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.569 வழங்கப்படுகிறது.

இந்த கூலியை கொண்டு வாழ்க்கை நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே தினக் கூலி பணியாளா்களான எங்களை பணி நிரந்தரம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ தமிழ்ச்செல்வி, இது குறித்து வேளாண்மைத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுச் சென்று பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.