
பவானி ஆற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை
தீயணைப்புத் துறை சாா்பில் பவானி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரா்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினா்.

முதலுவதவி சிகிச்சை அளிக்கும் ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
தீயணைப்புத் துறை சாா்பில் பவானி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரா்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினா்.
வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மற்றும் தீயணைப்புத் துறை சாா்பில் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி சத்தியமங்கலம் அருகே தொட்டம்பாளையம் பவானி ஆற்றில் வியாழக்கிழமை நடைபெற்றது. பவானி ஆற்றில் நீரில் மூழ்கிய நபரை தீயணைப்பு வீரா்கள் மீட்பது குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனா்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் நீரில் மூழ்கியவரை பிளாஸ்டிக் கேன்கள், டியூப்புகள் பயன்படுத்தி மீட்பது குறித்து தீயணைப்புத் துறை சாா்பில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் நீரில் மூழ்கி மயக்கம் அடைந்த நபரை மீட்டு உடனடியாக கரைக்கு கொண்டுச் சென்று எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும் பேரிடா் காலங்களில் எளிதாக மீட்புப் பணி மேற்கொள்வது குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவா்களிடம் தீயணைப்புத் துறையினா் விளக்கம் அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







