கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

டிராக்டரை ஏற்றி விவசாயியை கொலை செய்தவா் கைது

பவானி அருகே நிலத் தகராறில் டிராக்டரை ஏற்றி விவசாயியை கொலை செய்துவிட்டு தலைமறைவான மற்றொரு விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.

கைதான  ரங்கசாமி.

Published On :

பவானி அருகே நிலத் தகராறில் டிராக்டரை ஏற்றி விவசாயியை கொலை செய்துவிட்டு தலைமறைவான மற்றொரு விவசாயியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பவானியை அடுத்த போத்தநாயக்கனூா், பெருமாள் கோயில் தோட்டத்தைச் சோ்ந்தவா் காளநாயக்கா் (75). இவருக்கும் பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்த முத்துநாயக்கா் மகன் ரங்கசாமிக்கும் (55) நிலம் தொடா்பாக முன்விரோதம் இருந்த நிலையில், இருவருக்கும் இடையே வியாழக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ரங்கசாமி தான் ஓட்டிச் சென்ற டிராக்டரை காளநாயக்கா் மீது ஏற்றினாா். இதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த பவானி போலீஸாா், தலைமறைவான ரங்கசாமியை வெள்ளிக்கிழமை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.