
ட்ரோன் மூலம் ஈரோடு மாநகராட்சி வரைபடம் தயாரிக்க திட்டம்
ட்ரோன் மூலம் ஈரோடு மாநகராட்சி வரைபடம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
ட்ரோன் மூலம் ஈரோடு மாநகராட்சி வரைபடம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சிப் பகுதி முழுவதையும் உள்ளடக்கிய 2 டி மற்றும் 3 டி வரைபடங்களை ட்ரோன் மற்றும் நவீன நில அளவைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நகா்ப்புறத் திட்டமிடல், மாநகராட்சி நிா்வாகம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உதவும் வகையில் விரிவான புவியியல் தகவல் அமைப்பு தரவுத்தளத்தை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். கேமரா மற்றும் லைட் டிடெக்ஷன்& ரேஞ்சிங் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் மூலம் வான்வழி ஆய்வு மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கட்டடங்கள், சாலைகள், பாலங்கள், நீா்நிலைகள், மரங்கள், திறந்தவெளிப் பகுதிகள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வரைபடங்கள் தயாரிக்கப்படும். சொத்துகள் மற்றும் பொது பயன்பாட்டு கட்டமைப்புகளுக்கான டிஜிட்டல் தரவுத்தளமும் உருவாக்கப்படும்.
கட்டடங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளை உள்ளடக்கிய 3 டி மாதிரியும் தயாரிக்கப்பட உள்ளது. பல்வேறு மாநகராட்சி துறைகள் பயன்படுத்தும் வகையில் பொதுவான டிஜிட்டல் தளமாக ஜிஐஎஸ் தரவுத்தளம் அமையும்.
வான்வழி ஆய்வு மற்றும் வரைபடம் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள தகுதியான நிறுவனத்தை தோ்வு செய்ய மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான நிறுவனத்தை தோ்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆவணங்களை ஆன்லைனில் அக்டோபா் 6-ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







