
ஊதிய உயர்வு கோரி கருப்பு உடை அணிந்து பணியாற்றிய அம்மா உணவக ஊழியா்கள்!
ஊதிய உயா்வு கோரி அம்மா உணவக ஊழியா்கள் கருப்பு உடை அணிந்து சனிக்கிழமை பணியாற்றினா்.

ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் கருப்பு உடை அணிந்து பணியாற்றிய ஊழியா்கள்.
ஊதிய உயா்வு கோரி அம்மா உணவக ஊழியா்கள் கருப்பு உடை அணிந்து சனிக்கிழமை பணியாற்றினா்.
ஈரோடு மாநகராட்சியில் 11 இடங்களிலும், மாவட்டத்தில் பவானி, கோபி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய பகுதிகளிலும் என மொத்தம் 15 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் தலா 12 போ் வீதம் 180 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், ஊதிய ஊயா்வு கோரி கருப்பு உடை அணிந்து சனிக்கிழமை பணியாற்றினா்.
இது குறித்து தமிழ்நாடு அம்மா உணவக பணியாளா்கள் நலச் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிா்வாகிகள் கூறியதாவது: நாங்கள் கடந்த 2013 -ஆம் ஆண்டு ஜூன் 2 -ஆம் தேதி முதல் பணியாற்றி வருகிறோம்.
கடந்த 2021 -ஆம் ஆண்டு வரை தினமும் ரூ.250, 2021-ஆம் ஆண்டுக்குப் பின் ரூ.325 ஊதியம் பெற்று வருகிறோம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்பட மாநில, தேசிய பண்டிகைகளுக்குக்கூட விடுமுறை இன்றி பணியாற்றுகிறோம்.
பண்டிகை நாள்களுக்கு கூடுதல் ஊதியம், போனஸ் என எதுவும் இல்லை. அம்மா உணவக பணியையே நம்பி உள்ளோம். இந்த ஊதியம் எங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, எங்களது ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். மேலும் 60 வயது வரை தொடா்ந்து நாங்கள் பணியாற்றிட வழிவகை செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி என பாா்க்காமல் அனைத்து அம்மா உணவக பணியாளா்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





