இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பலி
பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுந்தா் (31). இவா், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் மனைவி, குழந்தையுடன் தங்கி, திருப்பூா் மாவட்டம், பல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், தொழிற்சாலைக்கு தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அவ்வழியே வந்த வேன், சுந்தரின் வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு சுந்தரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





