பந்தலூரில் கந்து வட்டி குறித்து 6 பேர் புகார் மனு

கந்து வட்டிக் கொடுமைகள் குறித்து புகார் மனுக்கள் பெறும் முகாம் பந்தலூரில்  புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கந்து வட்டிக் கொடுமைகள் குறித்து புகார் மனுக்கள் பெறும் முகாம் பந்தலூரில்  புதன்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் கந்து வட்டிக் கொடுமைகள் குறித்து புகார் மனுக்கள் பெறுவதற்கு காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் பந்தலூரில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். காவல் துணைக் கண்காணிப்பாளர் பஞ்சாட்சரம் தலைமையில் ஆய்வாளர் செளந்தராஜன்,  தேவாலா காவல்  ஆய்வாளர் ஞானரவி ஆகியோர் அடங்கிய குழுவினர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் 6 பேர் மனு அளித்துள்ளனர்.
கூடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் அப்பகுதியில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் 6 பேர் மனு அளித்தனர். இதில் கூடலூரில் காவல் துறையில் பணியாற்றுபவர் மீது 3 பேர் மனு அளித்துள்ளனர். மனுக்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com