குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்துள்ளது.
குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவியது. பிற்பகல் முதல் பரவலாக மழை பெய்தது.
அவ்வப்போது மூடு பனியும் உருவாகி வருவதால் வாகனங்களை இயக்குவதில் கடும் சிரமம் எற்பட்டது. சாலைகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்காலும், மழை காரணமாக வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதாலும் அவ்வப்போது நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமான நிகழ்வாகியுள்ளது. மேலும், மழை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டமும் முடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.