2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மஞ்சூர் வட்டாரத்தில் நெய் மிளகாய் சாகுபடி தீவிரம்

மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெய் மிளகாய் சீசன் துவங்கியுள்ளது. இம்மிளகாய் கிலோ ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:14 am

DIN

மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெய் மிளகாய் சீசன் துவங்கியுள்ளது. இம்மிளகாய் கிலோ ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத்தோட்டக் காய்கறி சாகுபடி பெருமளவில் செய்யப்படுகிறது. இதில் பச்சை மிளகாய், குடை மிளகாய், கறி மிளகாய், காந்தாரி மிளகாய், நெய் மிளகாய் என அழைக்கப்படும் மூட்டை மிளகாய் உள்ளிட்ட பல்வேறு ரக மிளகாய்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
மலைத்தோட்டக் காய்கறிகளுக்கு இடையே ஊடுபயிராக நெய் மிளகாய் என அழைக்கப்படும் மூட்டை மிளகாயை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர் உள்ளிட்ட  பகுதிகளில் நெய் மிளகாய் அதிக அளவில் உற்பத்தியாகிறது.  
நெய் மிளகாய், இலங்கையை பூர்வீகமாகக் கொண்டது.  தமிழகத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சென்ற தமிழர்கள், மீண்டும் தாயகம் திரும்பிய போது இந்த மிளகாய் விதைகளைக் கொண்டு வந்தனர். இதனால் அவர்கள் வாழும் பகுதிகளில் இந்த மிளகாய் அதிக அளவு பயிரிடப்படுகிறது.
ஆரம்பத்தில் தங்கள் தேவைக்கு மட்டுமே நெய் மிளகாயைப் பயிட்டு வந்தனர். ஆனால் தற்போது விற்பனைக்காகவும் பயிரிட்டு வருகின்றனர். இந்த மிளகாய், நெய்யின் சுவை,  மணத்தைக் கொண்டுள்ளதால் இதற்கு "நெய் மிளகாய்' என்று பெயர் வந்தது. அடர் சிவப்பு, பச்சை நிறத்தில் காணப்படும் இந்த மிளகாயை தற்போது பலரும் பயன்படுத்த துவங்கியுள்ளதால்,  சந்தையில் கிராக்கி அதிகரித்துள்ளது.
இந்த மிளகாய், மழைக் காலமான ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அதிக மகசூல் தரும்; கோடையில் மகசூல் குறைந்து காணப்படும்.  உடல் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ளவும் புற்றுநோய் வராமல் தடுக்கவும் இது உதவுவதாகக் கூறப்படுவதால்,  மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது.
தற்போது இந்த மிளகாய்க்கு கிலோ ரூ. 200 முதல் ரூ. 250 வரை சந்தையில் விலை கிடைப்பதால், இதைப் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலகிலேயே அதிக காரத்தன்மை கொண்டதாக "பூத்ஜலக்கியா' என்ற மிளகாய் கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றது. ஆனால் அந்த சாதனையை 2012-ஆம் ஆண்டு நெய் மிளகாய் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.