தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மஞ்சூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் கரடி: அச்சத்துடன் தொழிலாளர்கள் ஓட்டம்

மஞ்சூர் அருகே கெரடாலீஸ் கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் கொய்யாப் பழத்தை ருசிக்க வந்த கரடியைக் கண்டு அஞ்சி தோட்டத் தொழிலாளர்கள் ஓட்டமெடுத்தனர். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:53 pm

DIN

மஞ்சூர் அருகே கெரடாலீஸ் கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் கொய்யாப் பழத்தை ருசிக்க வந்த கரடியைக் கண்டு அஞ்சி தோட்டத் தொழிலாளர்கள் ஓட்டமெடுத்தனர். 
மஞ்சூர் அருகே தூதூர்மட்டம், கெரடாலீஸ், டெரேமியா, அணிமன் உள்ளிட்ட கிராமங்களில் 1,500-க்கு மேற்பட்ட மக்கள்  குடியிருந்து வருகின்றனர். இக்கிராமங்கள் அடர்ந்த தேயிலைத் தோட்டம், விளைநிலம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. 
உணவு, குடிநீர் தேடி, கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு,  விளை நிலங்களுக்குள் நுழைந்து, இப்பகுதி மக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. 
அணிமன், கெரடாலீஸ் பகுதிகளிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் தற்போது கொய்யாப்பழ சீசன் துவங்கி உள்ளதால், அவற்றை ருசிக்க கரடி ஒன்று திங்கள்கிழமை பகல் நேரத்தில் வந்தது. இதைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக கூக்குரலிடவே, கரடி அருகிலிருந்த தேயிலைத் தோட்டப் புதரில்  மறைந்தது.  
அங்கு தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கரடியைக் கண்டவுடன் அங்கிருந்து ஓட்டமெடுத்தனர். தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினர், கரடியை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.