
குன்னூர் நகர காவல் துறை சார்பில் பொதுமக்களின் வசதிக்காக 6 இடங்களில் புகார் பெட்டி வைக்கும் பணி புதன் கிழமை துவங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் காவல் துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆலோசனையின் படி, நீலகிரி மாவட்டம் முழுவதும் புகார் பெட்டி வைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
குன்னூரில் காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நகர ஆய்வாளர் சுப்ரமணியன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் ரகுவரன், ஜெயகுமார் முன்னிலையில் குன்னூர் நகர காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளான மாடல்ஹவுஸ், ஆப்பிள் பி, மவுண்ட்ரோடு, காட்டேரி, ஒட்டுப்பட்டறை, ஒய்.எம்.சி.ஏ. உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து குன்னூர் நகர ஆய்வாளர் சுப்ரமணியன் கூறியதாவது:
தங்கள் பிரச்னைகள் குறித்து காவல் நிலையத்துக்கு நேரில் வந்து புகார் அளிக்க முடியாத பொதுமக்கள் குன்னூர் நகரில் 6 இடங்களில் வைக்கப்பட்டுள்ள புகார்ப் பெட்டியில் தங்களது புகார்களை அளித்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் குற்றச் சம்பவங்கள் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






