‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

உதகையில் நடுங்கும் குளிரிலும் கேரல்ஸ் நிகழ்வுகள்

கிறிஸ்துமஸ் என்றாலே பல்வேறு நிகழ்வுகள் நினைவுக்கு வரும் நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்து

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கிறிஸ்துமஸ் என்றாலே பல்வேறு நிகழ்வுகள் நினைவுக்கு வரும் நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்து ஒவ்வோர் கிறிஸ்தவ ஆலயத்திலும் பூபாளம் என அழைக்கப்படும் கேரல்ஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 
இது கிறிஸ்து பிறப்பை முன்கூட்டி அறிவிக்கும் நிகழ்வாக மட்டுமல்லாமல், சாதி, மத, பேதமின்றி அனைவரும் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டுமென்பதை வலியுறுத்தும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது. 
இரவு நேரங்களில் தொடங்கும் பூபாள நிகழ்ச்சிகள் சில நாள்களில் நள்ளிரவு வரையிலும் தொடர்கின்றன. இதில் உதகை புறநகர்ப்  பகுதிகளில் நடுங்கும் குளிரிலும் பூபாளக் குழுவினரை வரவேற்க  மக்கள் காத்துக்கொண்டிருப்பர். 
உதகையில் தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பூபாள பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் உதகை அருகேயுள்ள வண்டிசோலை பகுதியில் அமைந்துள்ள தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தின் சார்பில் கிறிஸ்துமஸ்  பூபாள பாடல்  நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 
இத்தேவாலயத்தின் பூபாளக் குழுவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பங்குத் தந்தை ஸ்டானிஸ் தலைமையிலும்,  உதவி பங்குத் தந்தை டோமினிக் முன்னிலையிலும் கடந்த 1ஆம் தேதி தொடங்கி, தேவாலயத்துக்கு உள்பட்ட குடும்பத்தினரின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் சென்று கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பைக் குறித்தும், குழந்தை இயேசுவின் உருவ சிலையை வைத்து பாடல்கள் பாடியும்,  பிரார்த்தனைகள் செய்தும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 
இதேபோல, பிங்கர்போஸ்டு, பட்பயர் பகுதிகளில் அருட்திரு பிரபு தலைமையிலும், குருசடி பகுதிகளில் அமிர்தராஜ் தலைமையிலும் பூபாளக் குழுவினர் பாடல்களைப் பாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.