கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை பேரூராட்சி நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும் என தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கோத்தகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட மார்க்கெட் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலமாகப் பேரூராட்சிக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.
இங்குள்ள கடைகளை மேலும் முறைப்படுத்தும் பட்சத்தில், கூடுதலாகவும் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், மார்க்கெட்டினுள் உள்ள நடைபாதை மிகவும் குறுகலாக அமைந்துள்ளதாலும், நடைபாதையை ஆக்கிரமித்துப் பொருள்கள் வைக்கப்பட்டிருப்பதாலும் மக்கள் நடந்து செல்வதில் கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில், ஒரு கடையில் இருந்து, மற்றோர் கடைக்கு செல்லும் நடைபாதை சிறிய சந்துபோல இருப்பதால் எதிரில் வருபவர்களுக்கு கூட வழிவிட முடியாத நிலை உள்ளது.
மேலும், செங்குத்தான பகுதியில் அமைந்துள்ள இந்த மார்க்கெட் பகுதியில், மழை நாள்களில் தண்ணீர் வழிந்தோட வடிகால் வசதி இல்லாத நிலையில், நடைபாதையிலேயே தண்ணீர் செல்வதால், மக்கள் நடந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், மார்க்கெட் பகுதியில் கடைகளை இடித்து, ஒரே அளவில் கான்கிரீட் கட்டடமாக மாற்றி வாடகைக்குவிட பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.
இதற்காகப் போதிய நிதி இல்லாத நிலையில் அத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், ஏற்கெனவே இட நெருக்கடியில் இருந்த மார்க்கெட்டில், அடுத்தடுத்து கூடுதலாக கடைகள் அமைக்கப்பட்டுவிட்டதால் மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
எனவே, மக்கள் சிரமமின்றி சென்றுவர மார்க்கெட் நடைபாதையை விரிவுபடுத்தி, கடைகளை முறைப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குப்பையில் கிடந்த 2 பவுன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த நோ்மையான தூய்மைப் பணியாளா்கள்! ஆட்சியா் நேரில் அழைத்துப் பாராட்டு

ஊதியூா் அருகே அலங்கார வளைவில் மோதிய காா்: ஓட்டுநா் காயம்

அங்கன்வாடி அமைத்துத் தரக் கோரி குழந்தைகளுடன் வந்த பெண்கள்

விசாரணை கைதி கொலை: சிறையில் சிபிசிஐடி எஸ்.பி. நேரடி விசாரணை
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


