காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

நீலகிரி மாவட்டத்தில் விளையும் பீன்ஸ்களுக்கு 3 மாதத்துக்குப் பின் கூடுதல்  விலை

நீலகிரி மாவட்டத்தில் விளையும் பீன்ஸ்களுக்கு  3 மாதத்துக்குப் பின் கூடுதல்  விலை கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  

Updated On :30 ஜனவரி 2024, 6:45 pm IST

நீலகிரி மாவட்டத்தில் விளையும் பீன்ஸ்களுக்கு  3 மாதத்துக்குப் பின் கூடுதல்  விலை கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  
நீலகிரி மாவட்டத்தில் தூதூர்மட்டம், கெரடாலீஸ், கிளிஞ்சடா, கரும்பாலம், சேலாஸ், சோகத்தொரை, பேரக்ஸ், உபதலை, பழைய அருவங்காடு, கேத்தி பாலடா உள்ளிட்ட பகுதிகளில்  கேரட், பீட்ருட், முட்டைகோஸ், நூல்கோல், பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெள்ளைப் பூண்டு, முள்ளங்கி, காளிபிளவர் உள்ளிட்ட காய்களைப் பயிரிட்டு வருகின்றனர். 
இந்த கிராமப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களில்  நமீதா,  நமீதா ஒயிட், பெள்ளி, ரிலையன்ஸ் புஸ், உள்ளிட்ட பல்வேறு ரக பீன்ஸ் ரகங்கள் பயிரிடப்பட்டன. தற்போது இவ்வகையான  பீன்ஸ்களுக்கு கிலோ ரூ. 50 முதல் 60 வரை விலை கிடைத்து வருகிறது.  
கடந்த ஆண்டு குன்னூர், கோத்தகிரி, குந்தா, உதகை உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ள விவசாயிகள், பெங்களூருவில்  இருந்து தருவிக்கப்பட்ட நமீதா ரக பீன்ஸ் விதைகளை சுமார் 1,000 கிலோவுக்கும் அதிகமாகப் பயிரிட்டனர். ஆனால், இந்த ரக விதைகளில் இலைச் சுருட்டல், மஞ்சள் நோய் அதிக அளவில் காணப்பட்டதால் செடிகள் ஊக்கமில்லாமல் விவசாயிகள் வெகுவாக  பாதிக்கப்பட்டனர். 
இந்நிலையில், தற்போது  நீலகிரியில் விளையும்  பீன்ஸ் ரகங்களுக்கு ஓரளவு கட்டுபடியாகும் விலை கிடைத்து வருவதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.