தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
கீழ்கோத்தகிரி ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


கீழ்கோத்தகிரி ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கீழ்கோத்தகிரி ஒன்றிய கழகச் செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். அவைத் தலைவர் மோகன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் பங்கேற்று பேசுகையில், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை ஒரு மாதம் கொண்டாடுவது எனவும், பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை, ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவு வழங்குவது, தி.மு.க. மாநாட்டில் சீருடையுடன் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை செயலாளர் ஆதித்யன் நன்றி கூறினார்.
இதில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையா ராஜு, கண்ணன், எக்ஸ்போ செந்தில், இளைஞர் அணி சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...