உதகை நகராட்சிப் பகுதியில் தெருவிளக்குகளைப் பராமரிக்க சிறப்பு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏணியுடன் கூடிய இந்த நவீன தானியங்கி வாகனத்தின் இயக்கத்தை உதகை நகர்மன்ற ஆணையர் ரவி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்துப் பேசியதாவது:
உதகை நகராட்சியில் 14-ஆவது மானிய நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் தெருவிளக்குகளைப் பராமரிக்க ஏணியுடன் கூடிய தானியங்கி வாகனம் ரூ. 29 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது.
இந்த நகராட்சியின் 36 வார்டுகளில் 4,700 தெருவிளக்குகள் மற்றும் 22 உயர் கோபுர மின்விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நகரம் சுற்றுலாத் தலமாகவும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகின்றனர். இந்நிலையில், தெருவிளக்குகளை உடனுக்குடன் பராமரிக்க வசதியாக இந்த வாகனம் வாங்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

