ரோஜா மலர்க் காட்சி: ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்துக்கு 12 கோப்பைகள்
உதகையில் நடைபெற்று முடிந்த 10-ஆவது ரோஜா காட்சியில் சாண்டிநள்ளா ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்துக்கு 12 வெற்றிக் கோப்பைகள் கிடைத்துள்ளன.


உதகையில் நடைபெற்று முடிந்த 10-ஆவது ரோஜா காட்சியில் சாண்டிநள்ளா ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்துக்கு 12 வெற்றிக் கோப்பைகள் கிடைத்துள்ளன.
உதகையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் 2 நாள் ரோஜாக் காட்சி நடத்தப்பட்டது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பரிசுகளை வழங்கினார். இந்த ரோஜா காட்சியில் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திற்கு 12 வெற்றிக் கோப்பைகள் கிடைத்துள்ளன. இதில் 3 முதல் பரிசுகளும், 5 இரண்டாம் பரிசுகளும், ஸ்டெர்லிங் பயோடெக் ஓய்வு விடுதிக்கு ஒரு முதல் பரிசும், 3 இரண்டாம் பரிசுகளுமாக மொத்தம் 12 வெற்றிக் கோப்பைகள் கிடைத்துள்ளன.
அதேபோல, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை நிறுவனத்திற்கு 7 முதல் பரிசு மற்றும் ஒரு இரண்டாம் பரிசுமாக 8 கோப்பைகளும், வெலிங்டன் பாளைய வாரியத்திற்கு 2 முதல் பரிசுகளும், 2 இரண்டாம் பரிசுகளும், தேனாடுகம்பை மிலேனியம் வில்லாவிற்கு 2 முதல் பரிசு மற்றும் ஒரு இரண்டாம் பரிசும், குன்னூர் புனித ஜோசப் ஆண்கள் மேனிலைப்பள்ளிக்கு 2 முதல் பரிசுகளும், வெலிங்டன் பாளைய வாரிய அலுவலகத்திற்கு ஒரு முதல் பரிசும், ஒரு இரண்டாம் பரிசும், குன்னூர் எல் அண்டு டி நிறுவனத்திற்கு ஒரு முதல் பரிசும், கிரீன்ஸ் ஹார்ட்டி டெக் நிறுவனத்திற்கு ஒரு இரண்டாம் பரிசும், திருநெல்வேலி மாவட்ட தோட்டக் கலைத் துறைக்கு ஒரு முதல் பரிசும், ஒரு இரண்டாம் பரிசும் கிடைத்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...