மஞ்சூர் அருகே கைகாட்டி பஜார் பகுதியில் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர்.
மஞ்சூர் அருகே கைகாட்டி பஜார் பகுதி ஆருக்குச்சி, அறையட்டி, மேலூர், மஞ்சக்கம்பை, நெடுகல் கம்பை, ஆலட்டனை உள்ளிட்ட கிராமங்கள் மட்டுமல்லாமல் குந்தா, மஞ்சூர், கிண்ணக்கொரை, தேவர்சோலா, பெங்கால் மட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மையப்பகுதியாக உள்ளது. இதோடு ஊட்டி, குன்னூர் பகுதியில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் இங்கு தான் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன.
இப்பகுதி அடர்ந்த தேயிலைத் தோட்டம், அடர்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் இங்கு நடமாடி வருவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் பஜார் பகுதியில் கடந்த 2 மாதங்களாக தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இப்பிரச்னை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் தவித்துவருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ராஜபிரதாப் கூறுகையில், கைகாட்டி பஜார் பகுதி 20க்கு மேற்ப்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக உள்ளது.
மேலும் இப்பகுதி பாலகொலா, மேலூர் ஆகிய ஊராட்சிகளின் மையப்பகுதியாகவும் உள்ளது. இரவு நேரத்தில் தெருவிளக்கு எரியாததால் பொதுமக்கள் வன விலங்குகளால் தாக்கப்படும் நிலை உள்ளது. உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

