மாவட்டத்தில் இம்மாதம்14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இறுதிக் கட்டமாக மூன்று நாள்கள் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக திமுக மாவட்ட செயலர் பா.மு.முபாரக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திமுக கொள்கை பரப்புச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா தலைமையில் வரும் 14ஆம் தேதி காலை 11 மணிக்கு உதகை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட நஞ்சநாடு பகுதியிலும், பகல் 12 மணிக்கு இத்தலார் பகுதியிலும், பிற்பகல் 1 மணிக்கு எமரால்டு பகுதியிலும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அதேபோல, 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தொரையட்டி பகுதியிலும் பகல் 12 மணிக்கு எப்பநாடு கிராமத்திலும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
மாவட்டத்தில் இதன் மாவட்ட நிறைவு நிகழ்ச்சி 16ஆம் தேதி தெங்குமரஹாடா கிராமத்தில் நடைபெறவுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துரந்தர் - 2 : அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டுத் தேதி!
முதல்வர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

MLA- வாக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்! | DMK

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏவாக பதவியேற்பு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
