அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைத் தொழிலாளர்களின் மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நாடு தழுவிய அளவில் பாதுகாப்புத் துறைக்கு எதிரான இப்போராட்டத்தில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
பாதுகாப்புத் துறையில் தனியார் முதலீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரியும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தால் எப்போதும் தொழிலாளர்கள் நடமாட்டத்துடன் காணப்படும் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! யார் எவருக்கு வாய்ப்பு?

காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்

ஆலங்குளம், சங்கரன்கோவில் பகுதிகளில் சூரியனை சுற்றி தென்பட்ட ஒளிவட்டம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், சோனியா மரியாதை!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


