கூடலூர் நகராட்சி, ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பொதுப் பணித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகியவை சார்பில் ரூ. 1.75 கோடி மதிப்பில் நிறைவேற்றப் பணிகளையும், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
கூடலூர் நகராட்சிக்கு உள்பட்ட ஏழுமுறம் பகுதியில் பொதுப் பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பின் சார்பில் சட்டப் பேரவை உறுப்பினர்தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. நந்தன்கொல்லி முதல் காலம்புழா வரை ரூ.3 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. சிறீமதுரை ஊராட்சிக்கு உள்பட்ட கம்மாத்தி முதல் புத்தூர்வயல் வரை ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பில் சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8.32 லட்சம் மதிப்பில் செம்முண்டி பழங்குடியினர் காலனி பகுதியில் கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.7 லட்சம் மதிப்பில் செம்முண்டியில் வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்டுள்ள மேற்கண்ட பணிகளைஆட்சியர் பார்வையிட்டார்.
மேலும், சிறீமதுரை ஊராட்சிக்கு உள்பட்ட கோழிக்கண்டியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர்களுக்கான 12 வீடுகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.34 லட்சம் மதிப்பில் குண்டூர் பகுதியில் நடைபெற்றும் அகழி வெட்டும் பணியினையும், தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் மணிமூலாவில் ரூ.1.8 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் 15 தனிநபர் கழிப்பிடங்களையும், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் சேரங்கோடு ஊராட்சிக்கு உள்பட்ட பண்டப்பில்லா முதல் உண்டிகடவு வரை ரூ.18.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் கான்கிரீட் சாலை பணியினையும், தாய் திட்டத்தின் கீழ் ரூ.21.2 லட்சம் மதிப்பில் காவயல் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட சிறுபாலத்தையும், தாய் திட்டத்தின் கீழ் ரூ.25.1 லட்சம் மதிப்பில் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பிதர்காடு பஜார் முதல் செம்பகபாடி ஆரம்ப சுகாதார நிலையம் வரை அமைக்கப்பட்ட சாலையையும், தாய் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் பாலப்பள்ளி பழங்குடியினர் காலனியில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் வழங்குதல் பணியினையும், சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் சேரம்பாடியில் முடிக்கப்பட்ட கிணற்று பம்ப் அறை, தண்ணீர்க் குழாய் அமைக்கும் பணியையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். மொத்தம் ரூ.1.75 கோடி மதிப்பிலான வளச்சிப் பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பாபு, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் காசிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிப்காட் ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் சிறைப்பிடிப்பு! வேதாரண்யம் அருகே பரபரப்பு!

முறைகேடாக நிலங்களை கையகப்படுத்த முயற்சி: சிப்காட் எதிா்ப்புக் குழுவினா் ஆட்சியரிடம் மனு

ஏற்றம் கண்ட மின்சார வாகனப் பங்குகள்!

ரூ. 184 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற எச்எஃப்சிஎல்!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
